தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தான்: 11.30 மணி நிலவரப்படி 24.74% வாக்குகள் பதிவு!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 11.30 மணி நிலவரப்படி 24.74 சதவீதம் வாக்குல் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2023, 6:28 am

DIN

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 11.30 மணி நிலவரப்படி 24.74 சதவீதம் வாக்குல் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தலுக்கான ஒரே கட்டமான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை(நவ.25) 7 மணிக்கு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில், கரண்பூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் குா்மீா் சிங் அண்மையில் மரணமடைந்த அடுத்து அந்த தொகுதியை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 199 தொகுதிகளில் 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அவா்களின் வெற்றி தோல்வியை இன்று வாக்களிக்க தகுதியுள்ள சுமாா் 5.25 கோடி வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா்.

வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்வதற்காக மாநிலம் முழுவதும் 51,507-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 11.30 மணி நிலவரப்படி 24.74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.