‘பாஜக மக்களை நேரடியாகச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும்’: ப.சிதம்பரம்
மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளை ஆளும் பாஜக கட்சி தனது சாதகத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறைந்தது நான்கு பேரைத் தேர்தல் பிரச்சார நேரத்தில் விசாரணைக்கு அழைப்பதும் அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதும் இத்தகைய அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பாஜக வேட்பாளர் யாரையும் புலனாய்வு அமைப்பு விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் எல்லோரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனவு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பதிவில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், “என்னுடைய அறிதலில் ஒரு பாஜக வேட்பாளர் கூட இந்த அமைப்புகளால் சோதனைக்கு ஆளாகப்படவில்லை. பாஜக வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதும் அவர்களுக்கு தெய்வீக ஆசிர்வாதம் உண்டு எனவும் தெரியும். ஒருவேளை பாஜக ஆட்சி அமைந்தால் தெலங்கானா மக்களை அவர்கள் நேரடியாகச் சொர்க்கத்துக்கு கூட அழைத்துச் செல்வார்கள். புலனாய்வு அமைப்புகளைத் தவறாக பயன்படுத்துவது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: உத்தரகண்ட் சுரங்க விபத்து: 41 பேரை மீட்பதில் சிக்கல் நீடிப்பு
தெலங்கானா மாநிலத்தில் நவ.30-ல் வாக்குப் பதிவும் டிச.3 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.