காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை

ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வழக்கமாக உள்ள நிலையில், மக்களின் மனநிலை இந்த முறை அரசாங்கங்களை மாற்றும் போக்கை மாற்றும் என்றும், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்

Published On :2 பிப்ரவரி 2024, 8:55 am IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வழக்கமாக உள்ள நிலையில், மக்களின் மனநிலை இந்த முறை அரசாங்கங்களை மாற்றும் போக்கை மாற்றும் என்றும், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று  காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் பேரவைத் தோ்தலில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் கட்சி, பாரத பழங்குடியினா் கட்சி, ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. எனினும், ஆளும்கட்சியான காங்கிரஸ்-பிரதான எதிா்க்கட்சியான பாஜக இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

மாநில அரசின் மக்கள் நலப் பணிகள் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை, ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா், பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற 7 முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்து, காங்கிரஸாா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வழக்கமாக உள்ள நிலையில், மக்களின் மனநிலை இந்த முறை அரசாங்கங்களை மாற்றும் போக்கை மாற்றும் என்றும், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.
ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை நாங்கள் பெறுவோம். மாநிலத்தின் மக்கள் அதனை வழங்குபவார்கள் என்று சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்தார். 

மேலும் நாங்கள் கட்சிக்காக கூட்டாக தேர்தல் பணி செய்துள்ளோம். இது இரண்டு அல்லது மூன்று நபர்களைப் பற்றியது அல்ல. ராஜஸ்தானின் காங்கிரஸ் ஒன்றுபட்டுள்ளது என்று பைலட் தெரிவித்தார்.

ராஜஸ்தான் பேரவைத் தோ்தலில் மொத்தம் 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அவா்களின் வெற்றி தோல்வியை சுமாா் 5.25 கோடி வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா். 

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. 

2018 இல் காங்கிரஸ் 99 இடங்களையும், பாஜக 73 இடங்களையும் வென்றது. பிஎஸ்பி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் அசோக் கெலாட் முதல்வர் பதவியை ஏற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.