
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த பால்புதுமையின இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளத்தில் எழுந்த வெறுக்கத்தக்க கருத்துகளே அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியுள்ளன என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
16 வயது நிரம்பிய பிரன்ஷு சமூக வளைதளத்தில் பிரபலமான ஒப்பனைக் கலைஞராக வலம் வந்துள்ளார். கடந்த தீபாவளியன்று சேலை அணிந்த ரீல் ஒன்றினைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பல்லாயிரக்கணக்கில் குவிந்த வெறுக்கத்தக்கக் கருத்துகள் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என நடிகை மற்றும் சமூக ஆர்வலரான திரினேடா ஹெல்டார் கும்மாராஜு தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரன்ஷுவின் அந்தப் பதிவில், ஓரினச் சேர்க்கையாளர்களை வெறுப்பவர்கள் 4000ஆயிரத்திற்கும் அதிகமான வெறுக்கத்தக்கக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். பால்புதுமையின சிறுவர், சிறுமிகளுக்கு வலைதளத்திலும் சரி நிஜ உலகிலும் சரி பாதுகாப்பு என்பது கிடையாது எனத் தெரிவித்துள்ளார் திரினேடா ஹெல்டார்.
பிரன்ஷு தனது அம்மாவின் துப்பாட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான உண்மையானக் காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் உயிரிழந்த இளைஞரது தொலைபேசி காவல்துறையால் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.