உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆயுஷ்மான் ஆரோக்கிய அட்டைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும் எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்தப் பயனர் அட்டைகள் கட்டணமில்ல சிகிச்சை கிடைக்க வழிவகை செய்கிறது.
இன்று (சனிக்கிழமை) கோரக்பூரில் நடந்த மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட மக்களின் குறைகளைக் கேட்டறிந்த ஆதித்யநாத், தகுந்த நேரத்தில் தரமான மற்றும் நிறைவான சேவையை மக்களுக்கு அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
மேலும், “மருத்துவ உதவி தேவைப்படும் அனைவருக்கும் முழுமையான வசதி முதல்வரின் நிதியில் இருந்து வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் அட்டை இல்லாதவர்களின் சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசர கால அடிப்படையில் ஆயுஷ்மான் அட்டை வழங்கவும் தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க: உ.பி.யில் இன்று அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடல்: அரசு உத்தரவு!
மேலும், மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

