
அமேசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஆரோரா (Aurora) திட்டத்தைத் துவங்குயுள்ளது.
வணிக உலகின் ஜாம்பவானாகத் திகழும் அமேசான் நிறுவனம் மும்பையில் உள்ள சோல் ஏஆர்சி (Sol ARC) எனும் இலாப நோக்கமற்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உள்ள விநியோக நிலையங்களில் கற்றல்திறன் குறைபாடு உள்ள இளம் வயதினருக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது.
இதில் திறமையானவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது மட்டுமின்றி பணியாளர்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்துவது மற்றும் கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆதரவாக இருப்பதை ஊக்குவிக்கிறது.
'கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களை உள்ளடக்கிய, அனைவருக்கும் சமமான பணியிடங்களை உருவாக்குவதன் மற்றுமொரு முயற்சிதான் இந்த ஆரோரா திட்டம்' என அமேசான் இந்தியாவின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.