

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் மாதத்தில் 3 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டிசம்பர் 8 முதல் 15 வரை இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவமாக ராகுல் இந்திய புலம்பெயர்ந்தோருடன் உரையாற்ற உள்ளதாகவும், அவரது பயணத்தின்போது பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் இந்தாண்டின் தொடக்கத்தில் நார்வே, நெதர்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இந்திய புலம்பெயர்ந்தோருடன் உரையாடல் நிகழ்த்தினார் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.