எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள்: குஜராத்தில் அதிகரிக்கும் வறுமை

குஜராத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள் அல்லது 31 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

News image
Updated On :3 அக்டோபர் 2023, 2:39 pm IST


குஜராத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள் அல்லது 31 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த வறுமைக்கோடானது இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, கிராமப்பகுதிகளில்  மாதத்துக்கு ரூ.816ம், நகரப் பகுதிகளில் மாதத்துக்கு ரூ.1000மும், நாள் ஒன்றுக்கு கிராமத்தில் ரூ.26ம், நகரப் பகுதிகளில் ரூ.32ம் செலவிடும் திறனைக் கொண்டு அளவிடப்படுகிறது.

செப்டம்பர் 14ஆம் தேதி குஜராத் பேரவையில், காங்கிரஸ் எம்எல்ஏவின் கேள்விக்கு பதிலளித்த ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் பச்சுபாய் மகன்பாய் கபத், குஜராத்தில் 31,61,310 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார். இவர்களில் 16,28,744 குடும்பங்கள் மிக வறுமையில் இருப்பதாகவும், 15,32,566 குடும்பங்கள் ஏழ்மையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 - 21ம் ஆண்டில், 1,047 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கீழ் தள்ளப்பட்டுள்ளனர். வெறும் 14 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் வந்துள்ளனர். இதே நிலை 2021-22ல் எடுத்துக்கொண்டால் 1,751 பேர் வறுமைக்கோட்டுக்கீழ் தள்ளப்பட்டுள்ளனர். 2 குடும்பம்தான் மேலே வந்துள்ளது. இது 2022-23ல் 303 ஆக இருக்கிறது. ஒரே ஒரு குடும்பத்தான் மேலே வந்துள்ளது.

சராசரியாக ஒரு குடும்பத்தில் 6 பேர் இருக்கிறார்கள் என்று கொண்டால், குஜராத்தில் உள்ள 31 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கீழ் வாழ்கிறார்கள் என்றால், கிட்டத்தட்ட 7 கோடியே 89 லட்சம் பேர் ஏழைகளாக இருக்கிறார்கள் என்பது அர்த்தமாகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.