
சிக்கிமில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வடக்கு சிக்கிமில் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால், டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ராணுவ வாகனமும், 23 வீரர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய ராணுவம் தரப்பில் வெளியிட்ட செய்தியில், “வெள்ளத்தில் சிக்கிய 23 வீரர்கள் காணாமல் போயுள்ளனர். சில வாகனங்களும் நீரில் மூழ்கியுள்ளது. தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.