பத்மநாபசுவாமி கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் வழிபாடு!

கேரளத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பகவத் வழிபாடு மேற்கொண்டார். 
பத்மநாபசுவாமி கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் வழிபாடு!

கேரளத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பகவத் வழிபாடு மேற்கொண்டார். 

இன்று காலை 6.40 மணியளவில் கேரளத்தை அடைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் 
அனந்த சயனக் கோலத்தில் அமர்ந்திருக்கும் மகாவிஷ்ணுவின் கோயிலுக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அவர் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். 

அக்டோபர் 7 முதல் கேரளத்தில் இருக்கும் பகவத் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர்களின் கூட்டத்திற்காக அம்மாநிலத்திற்கு வந்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோயில் உலக பணக்கார இந்துக் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் ரகசிய அறைகளில் குவிந்திருக்கும் தங்க, வைர மற்றும் பல்வேறு விதமான வளங்களின் மொத்த மதிப்பு இன்றுவரை கணக்கிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com