
புதுதில்லி: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளித்து தொடா்பாக, தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு எதிராக, புதன்கிழமை அதிகாலை முதல் தில்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி வருகிறது.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உபா) பிஎஃப்ஐ அமைப்பைத் சட்டவிரோத அமைப்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு அறிவித்தது. மேலும், அந்த அமைப்பு செயல்பட 5 ஆண்டுகளுக்குத் தடைவிதிக்கப்ட்டது.
இந்நிலையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளித்து தொடா்பாக, தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு எதிராக, தில்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி வருகிறது.
இதையும் படிக்க | தோ்தலை எதிா்கொள்ளும் முதல்வா்கள்
மகாராஷ்டிராவில் அமைப்பின் பல இடங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் சோதனைகள் நடந்து வருகின்றன.
மும்பை விக்ரோலி பகுதியில் உள்ள அப்துல் வாஹித் ஷேக்கின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்துல் வாஹித் ஷேக் முமாபி ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்.
கேரளத்தின் வயநாடு, கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
செப்டர் 25 ஆம் தேதி ஏற்கனவே விசாரணை நடத்திய நிலையில் தற்போது மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜூன் என்பவரது வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. போலி ஆவணங்களை கொடுத்து பாஸ்போர்ட் வாங்கிய விவகாரத்தில் சோதனை நடத்தி வருகிறது. மதுரையில் பல பகுதிகளில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.
இது தவிர, ஹவுஸ் காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய தில்லியின் பல்லிமாறனில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து புதன்கிழமை என்ஐஏ குழுவினர் சோதனை நடத்தி வருகிறது.
கடந்த செப்டம்பரில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளித்து தொடா்பாக, கேரள மாநிலத்தின் வயநாடு, எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் திருச்சூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள அமைப்பின் முன்னாள் தலைவா்கள் அப்துல் சமத், லதீஃப் ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடைபெற்றது.
ஆகஸ்ட் மாதம், மலப்புரத்தில் உள்ள அமைப்பின் செயல்பாட்டாளர்களின் பலரது வீடுகளில் சோதனை நடைபெற்றது. வெங்கராவில் உள்ள தையில் ஹம்சா, திரூரில் உள்ள காளத்திபரம்பில் யாஹுதி, தனூரில் ஹனீபா மற்றும் ரங்கத்தூர் படிக்கபரம்பில் ஜாஃபர் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) இன் மிகப் பெரிய பயிற்சி மையமான மஞ்சேரியில் உள்ள கிரீன் வேலி அகாடமியை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் என்ஐஏ பறிமுதல் செய்தது. அதன்பிறகு இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.