ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி(விடியோ)

காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ஹெல்மெட் அணியாமல் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார்.  
ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி(விடியோ)

காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ஹெல்மெட் அணியாமல் ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். 
மேற்கு வங்க மாநிலத்தின் பெர்ஹாம்பூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. காங்கிரஸ் மக்களவைத் தலைவரான இவர் இன்று தனது தொகுதியில் பைபாஸ் சாலை திறப்பு விழாவின் போது ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் தொப்பி மட்டுமே அணிந்திருந்தார். 
இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றபோது தொப்பியை சரிசெய்ய கைப்பிடிகளில் இருந்து இரண்டு கைகளை எடுத்தார். அவருடன் மேலும் சில காங்கிரஸ் தொண்டர்களும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதுதொடர்பான விடியோ இணையத்தில் வைரலானது. இருப்பினும் அவரது செயல் சாலை பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என குற்றச்சாட்டும் எழுந்தது.
இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறியதாவது, அந்த இடத்துடன் தொடர்புடைய பல நினைவுகள் தனக்கு இருக்கிறது. காவல்துறை தனக்கு தண்டனை கொடுத்தால், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நான் இருசக்கர வாகனம் ஓட்டிய இடத்தில் யாரும் இல்லை என்று அவர் தெரிவித்தார். 
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் வரை இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com