
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியும் இணைந்து விஜயபேரி யாத்திரையில் பங்கேற்கின்றனர்.
மிசோரத்தைத் தொடர்ந்து தெலங்கானாவில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ராகுல், பிரியங்கா பிற்பகல் 3.30 மணிக்கு பேகம்பேட் விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, ராமப்பா கோயிலில் வழிபாடு செய்தனர். பின்னர், விஜயபேரி யாத்திரையைத் தொடங்க உள்ளனர். இதன்பிறகு மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ல் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அக்டோபர் 20 வரை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல் கலந்துகொள்வார் என்று அக்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.