நாட்டிலேயே அதிகம் மாசடைந்த பகுதி இதுதான்!

கடந்த வாரத்தில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அதிகம் மாசடைந்த நகரங்களின் காற்றின் தரக்குறியீடு மதிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


கடந்த வாரத்தில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை (நேற்று) அதிகம் மாசடைந்த நகரங்களின் காற்றின் தரக்குறியீடு மதிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக காற்றின் தரம் குறைந்து, அதிகம் மாசடைந்து வருகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் பட்டாசு வெடித்தல், பந்தம் ஏற்றுதல் போன்றவைகளால் காற்று மாசு அதிகரிக்கிறது. 

இதனிடையே காற்றின் தர மதிப்பு குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் தில்லி முதலிடத்தில் உள்ளது.

கடந்த புதன்கிழமை தில்லியில் தரக் குறியீடு 83 ஆகவும், வியாழக்கிழமை 117 ஆகவும் இருந்தது. கடந்த வெள்ளி கிழமை இந்த குறியீடு மிதமான அளவில் இருந்தது. தொடர்ந்து மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 313 ஆக அதிகரித்தது. 

காற்றின் தரம் மிகவும் மோசமடைந்த பட்டியலில் நான்கு நகரங்கள் இடம்பெற்றன. நொய்டா (354), ஃபரிதாபாத் (322), தில்லி (313), நொய்டா (304) குறியீடுகளைப் பெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com