பயங்கரவாதம் வீரியம்கொண்டது; அதற்கு எல்லைகள் தெரியாது: ஐநாவில் இந்தியா

பயங்கரவாதமானது மிகவும் வீரியம்கொண்டது, அதற்கு எல்லைகள், நாடுகள், போட்டிகள் என எதுவும் தெரியாது என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
பயங்கரவாதம் வீரியம்கொண்டது; அதற்கு எல்லைகள் தெரியாது: ஐநாவில் இந்தியா


பயங்கரவாதமானது மிகவும் வீரியம்கொண்டது, அதற்கு எல்லைகள், நாடுகள், போட்டிகள் என எதுவும் தெரியாது, பயங்கரவாத செயல்களை, உலகம் எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றும் வகையில், ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்புக் கூட்டம் நேற்று கூடியது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் மற்றும் காஸா பகுதியில் மனிதாபிமான முறையில், தடையற்ற உதவிகளை மக்களுக்கு வழங்கும் வகையில் நிலைமை சீரடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'பொதுமக்களின் பாதுகாப்பு, சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்' என்ற தலைப்பில் ஜோர்தான் கொணடு வந்த வரைவுத் தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையில் நிறைவேற்றப்பட்டது.  ஐக்கிய நாடுகள் பொது அவையில் அக்டோபர் 27 அன்று நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொது அவையில், உடனடி, நீடித்த மற்றும் நிலைத்த மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்து. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 121 நாடுகள் வாக்களித்தன. 14 நாடுகள் எதிராக வாக்களித்தன். இந்தியா உள்பட 44 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்துவிட்டன.

இந்த தீர்மானமானது, காஸா பகுதி முழுவதிலும் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சேவைகளை உடனடியாக, தொடர்ச்சியாக, போதுமான அளவில் மற்றும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரதிநிதி யோஜ்னா பட்டேல் உரையாற்றுகையில், வாக்களிப்பது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசினார். கருத்து வேறுபாடுகள் மற்றும் சிக்கல்கள் அனைத்தும் உரையாடல் மூலம் தீர்க்கப்பட வேண்டிய உலகில், இந்த ஐ.நா. அமைப்பு வன்முறையை நாடுவது தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

அதுவும் கூட, அடிப்படை மனித உயிர்களின் மதிப்புகளுக்கு எதிராக மிகத் தீவிரமாக இது நிகழும்போது என்று படேல் கூறினார்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடந்த தாக்குதல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறும் படேல், தனது வாக்களிப்பது தொடர்பான விளக்க உரையில் ஹமாஸ் குறித்து குறிப்பிட்டு எதுவும் பேசவில்லை.

மேலும், பயங்கரவாதம் என்பது மிகுந்த வீரியம் கொண்டது, அதற்கு எல்லைகளோ, நாடுகளோ, போட்டியோ என எதுவும் தெரியாது, பயங்கரவாத செயல்களுக்கு, உலக நாடுகள் ஒருவகையிலும் நியாயம் கற்பிக்க முடியாது, நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை புறந்தள்ளிவிட்டு, பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய அளவிலான சகிப்புத் தன்மையை நாடுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com