ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடுகிறார் ஆந்திர முதல்வர்!
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தின் கண்டகப்பள்ளி பகுதியில் ரயில் விபத்து நடந்த பகுதியை இன்று (அக்டோபர் 30) ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பார்வையிடுகிறார்.
மேலும் ரயில் விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்திப்பதற்கு முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தையும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரையும் பார்வையிட உள்ளதாகவும், அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ஆந்திர மாநில முதல்வர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் சுமார் 19 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிக்க | ‘வந்தே பாரத்’ ரயில்களும் விரிசல் தண்டவாளங்களும்!
இந்த பயங்கர ரயில் விபத்தை தொடர்ந்து 33 ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டன. 6 ரயில்கள் மாற்றி விடப்பட்டன. ஆந்திர மாநில கல்வி அமைச்சர் சத்யநாராயணா கூறும்போது, “ரயில் விபத்து குறித்து அறிந்ததும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்ததாகவும், உடனடியாக மீட்பு பணிகளை முடுக்கிவிட்டதாகவும் கூறினார். மேலும் மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும் கூறினார்.”
இந்நிலையில் இன்று விபத்து நடந்த பகுதிகளை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் பார்வையிட உள்ளார்.
இதையும் படிக்க | ஆந்திர ரயில் விபத்தில் பலி 14 ஆக உயர்வு! 50 பேர் காயம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.