சத்தீஸ்கர் பேரவைத் தேர்தலையொட்டி மானிய விலையில் சிலிண்டர், சுயஉதவி குழுக்களுக்கு கடன், இலவச மின்சாரம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதையொட்டி சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜல்பந்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
'சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சுமார் 6,000 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் சுவாமி ஆத்மானந்தா ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படும், சக்ஷம் யோஜனா(Saksham Yojna) திட்டத்தின் கீழ் பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இதையும் படிக்க | சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் வேட்புமனு தாக்கல்
ரூ. 500 மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும்.
சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
விவசாயிகளிடமிருந்து ஆதார விலையில் பருப்பு வாங்கப்படும்' என்றார்.
மேலும், பாஜகவை கடுமையாக சாடிய பிரியங்கா காந்தி, மதத்தின் பெயரால் உங்களை தவறாக வழிநடத்தி, உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை மட்டுமே கொண்டு வருபவர்களுக்கு வாக்களிப்பீர்களா அல்லது உங்கள் வளர்ச்சி மற்றும் நலனை உறுதி செய்யும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா?' என்று கேட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.