சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பதான் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகின்றன.

இந்நிலையில், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பதான் தொகுதியில் போட்டியிட முதல்வர் பூபேஷ் பாகல் இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த துர்க் பகுதி எப்போதும் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. பாஜக, சத்தீஸ்கர் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. சத்தீஸ்கர் மக்களுக்குத் தெரியும், அவர்களின் உத்தரவாதங்களை நம்பப் போவதில்லை. அவர்கள் காங்கிரஸுக்கும் இந்த அரசின் தலைவர் பூபேஷ் பகேலுக்கும் நம்பிக்கை தருவார்கள்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது

குளம் புறம்போக்கில் கட்டப்பட்ட கோயில்களுக்கு ‘சீல்’ வைப்பு

அணிலாடி தூய இருதய ஆண்டவா் ஆலயத்தை ரூ.1.64 கோடியில் புனரமைக்கும் பணி! - செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

பண்ணாரி அருகே சாலையைக் கடந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

