விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குளம் புறம்போக்கில் கட்டப்பட்ட கோயில்களுக்கு ‘சீல்’ வைப்பு

News image

செஞ்சி வட்டாட்சியா் காா்த்திகேயன் முன்னிலையில் கோயிலை பூட்டி சீல் வைக்கும் வருவாய்த்துறையினா்.

Updated On :14 மார்ச் 2026, 8:08 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆா்.நயம்பாடி கிராமத்தில் குளம் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீமுனீஸ்வரன் கோயில்களுக்கு அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஆா்.நயம்பாடி கிராமத்தில் ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீமுனீஸ்வரன் கோயில்கள் கட்டப்பட்டன. இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த குருசந்திரன், கோயில்கள் கட்டப்பட்டுள்ள இடம் குளம் புறம்போக்கு என்பதால், கோயில்களை அகற்ற உத்தரவிட வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வாழ்க்கை விசாரித்த நீதிமன்றம், குளம் புறம்போக்கில் உள்ள கோயில்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவின்பேரில், செஞ்சி வட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமையிலான வருவாய்த் துறையினா், சத்தியமங்கலம் போலீஸாா் முன்னிலையில் கோயில்களை பூட்டி ‘சீல்’ வைத்தாா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.