ஒரே நாடு, ஒரே தேர்தல்: சிறப்புக்குழு அமைத்தது மத்திய அரசு!

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு அமைத்துள்ளது. 
மத்திய அரசு
மத்திய அரசு

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு நேற்று(வியாழக்கிழமை) வெளியிட்டது. 

அதன்படி, செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். 

சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். தொடர்ந்து, அதன் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். 

முன்னதாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com