
தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தர் ஜெயினுக்கு, மருத்துவ காரணங்களுக்காக செப்டம்பர் 12 வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கு தொடா்பாக கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் திஹார் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது உடல் நிலை காரணமாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிக்க | ஒரே நாடு, ஒரே தேர்தல்: சிறப்புக்குழு அமைத்தது மத்திய அரசு!
இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது உடல்நிலை காரணமாக சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீனை செப்டம்பர் 12 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...