டிவிட்டரில் யோகி ஆதித்யநாத்தை பின்தொடர்வோர் 2.6 கோடி!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 26 மில்லியன்(2.6 கோடி) தாண்டியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
UP CM Yogis official X handle crosses 26 million followers mark
UP CM Yogis official X handle crosses 26 million followers mark
Updated on
1 min read

சமூக வலைத்தளமான டிவிட்டரில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 26 மில்லியன்(2.6 கோடி) தாண்டியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி அமித் ஷாவுக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது அரசியல் தலைவர் யோகி ஆதித்யநாத் ஆவார். முதல்வர் யோகிக்கு சமூக ஊடக தளமான டிவிட்டரில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பல நாடுகளின் தலைவர்களையும் கூட இவர் மிஞ்சியுள்ளார். 

நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உ.பி. திகழ்கிறது. பல துறைகளில் விரைவான வளர்ச்சியை ஏற்படுத்திய பெருமை இந்த மாநிலத்துக்கு உண்டு. அத்துடன் சாமானிய மக்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புகழ் எல்லை கடந்தது. 

அதன்படி, கடந்த 30 நாள்களில் அதிகம் பின்தொடர்ந்த நபர்கள், அமைப்புகள் மற்றும் துறைகளின் பட்டியலை டிவிட்டர் வெளியிட்டது. அதன்படி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பின்தொடர்பவர்கள் 2.67 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளமான டிவிட்டர் வெளியிட்டுள்ளது. 

கடந்த மாதத்தில் பிரதமர் மோடிக்கு 6.32 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் 2வது இடத்தில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com