
கோப்புப்படம்
குவாஹாட்டியின் புறநகர்ப் பகுதியில் ரூ.21 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து மூவர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகனத்தில் பயணித்தவர்களிடமிருந்து 2.527 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும் 198 சோப்புப் பெட்டிகள் ஜோராபத் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மூவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் அடங்கிய 21 சோப்புப் பெட்டிகள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டதையடுத்து, இரண்டு நாள்களில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டாவது பெரிய கடத்தல் இதுவாகும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...