

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா செவ்வாய்க்கிழமை 2 நாள் பயணமாக ஹிமாசலம் செல்கிறார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சமீபத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மணாலி, குலு, மண்டி, சிம்லா மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்களுக்கு பிரியங்கா காந்தி வருகை தர உள்ளார்.
மேலும், மலைப்பிரதேசங்களில் பல்வேறு நிவாரண பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஹிமாசலில் பெய்த கனமழை, வெள்ளத்துக்கு 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
ஹிமாசலத்தை மீண்டும் மீட்டெடுக்க மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
செப்.9ல் தில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் முர்மு வழங்கிய விருந்தில் முதல்வர் சுகு கலந்துகொண்டார். மேலும் பிரதமர் மோடியை சந்தித்து மாநில நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.
சேதத்தின் தீவிரத்தைத் தெரிவித்த முதல்வர், இதைத் தேசிய பேரிடராக அறிவிக்குமாறு மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். பேரழிவின் விளைவாக, மாநிலத்தில் ரூ.12,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தனது தரப்பில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.