
நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்ததையடுத்து சோதனையில் அது நிபா தொற்றுதான் என உறுதி செய்யப்பட்டது.
கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உள்ளது. இருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த இருவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | நிபா: கோழிக்கோட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு செப். 24 வரை விடுமுறை!
மேலும், மாநில அரசு தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோழிக்கோடு மாவட்டத்தில் பபள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிபா பாதிப்பு குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
11 பேரின் மாதிரிகள் புணேவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. தற்போது வரை 6 பேருக்கு(இருவர் மரணம்) நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேப்பூர் துறைமுகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுளள்ன. பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் அடங்கிய 19 குழுவினர் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ஆப்பிள் ஐஃபோன் 15: முன்பதிவு செய்வது எப்படி? ஆஃபர் விவரங்கள்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...