
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா எக்ஸ்டென்ஷனில் கட்டுமானத்திலிருந்த கட்டடத்தின் மின்தூக்கி செயலிழந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
நொய்டாவின் அம்ரபாலியில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தில் 9 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். வெள்ளிக்கிழமை காலை மின்தூக்கி திடீரென செயலிழந்து 14வது தளத்தில் இருந்து அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை நான்கு பேரும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து கட்டட நிர்வாகத்தின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.