கொல்கத்தா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 28 வயது மருத்துவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதையடுத்து, நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டால் இளம் கண் மருத்துவர் டெபோடி சட்டோபாத்யாய் நேற்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து மாநிலத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் கண் மருத்துவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், மேலும் பல உறுப்புகள் செயலிழந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த கண் மருத்துவர் தெற்கு கொல்கத்தாவின் கார்பா பகுதியில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


