

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நிறுத்திவைக்கப்பட்ட இணையச் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என மணிப்பூர் முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடையே முதல்வர் கூறுகையில்,
வடகிழக்கு மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக நிறுத்தப்பட்ட இணைய சேவை தற்போது மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய-மியான்மர் எல்லையில் இருபுறமும் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இன்றி எல்லையின் 16 கி.மீ தூரம் வரை செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போலிச் செய்திகள் பரப்புவதைத் தடுக்கவும், பிரசாரம் மற்றும் தேவையற்ற வெறுப்புணர்சியை தூண்டும் செய்திகள் பரவுவதைத் தடுக்க கடந்த மே 3-ம் தேதி மொபைல் இணைய சேவையை அரசு நிறுத்தியது.
படிக்க: 12 ராசிக்கான வாரப் பலன்கள்!
நிலைமை தற்போது சீரடைவதால், இன்று முதல் மாநிலம் முழுவதும் மொபைல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் வருகையை அரசு தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இந்திய-மியான்மர் எல்லையில் வேலி அமைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.