
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் சா்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை ) அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்கிரிக்கெட் மைதானத்துக்கான பணிகளைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துறை அதிகாரிகள், பிசிசிஐ நிர்வாகிகள், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | ரயில் விபத்துகளில் இறந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!
விழாவில் 'நமோ' என்று பெயரிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை பிரதமர் மோடிக்கு சச்சின் டெண்டுல்கர் வழங்கினார்.
30 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. சுமார் 30,000 பேர் இதில் அமர முடியும். கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட உள்ளது. திரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்களும் உடுக்கை வடிவலான மையப்பகுதியும் பிறை நிலா வடிவலான மேற்கூறையும் அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எல்&டி நிறுவனம் உருவாக்கும் இந்த மைதானம் இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...