குஜராத்தில் பழைய பாலம் இடிந்து விழுந்து 4 பேர் காயம்

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் போகாவோ ஆற்றின் பழைய பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குஜராத்தில் பழைய பாலம் இடிந்து விழுந்து 4 பேர் காயம்


சுரேந்திரநகர் (குஜராத்): குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் போகாவோ ஆற்றின் பழைய பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டம், வஸ்பாதி பகுதியில் போகாவோ ஆற்றின் கடந்து செல்வதற்காக சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டிருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த நிலையில், பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்து நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை டிப்பர் லாரி ஒன்று பாலத்தை கடக்க முயன்றபோது பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்றுகொண்டிருந்த குப்பை லாரி, இருசக்கர வாகனங்களும் ஆற்றுக்குள் விழுந்தன. 

பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஆற்றில் விழுந்தவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். ஆற்றில் விழுந்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இதில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆற்றில் விழுந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உடனடியாக மீட்கப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, போகாவோ ஆற்றின் அணைக்கட்டுக்கு அருகில் இருந்து போக்குவரத்தை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com