போபாலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பாஜகவின் மாபெரும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக போபால் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
போபாலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பாஜகவின் மாபெரும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக போபால் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பிரதமர் மோடிக்கு முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மாநில பாஜக தலைவர் வி.டி.சர்மா ஆகியோரின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் போபாலில் நடைபெறும் அரங்கத்திற்கு வந்தடைந்தார். மோடி கைகளை அசைத்து பாஜக கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். 

மேலும், பிரதமர் மோடியை வரவேற்க மத்திய அமைச்சர்கள், நரேந்தி சிங் தோமர், ஜோதிராதித்ய சிந்தியா, பிரஹலாத் படேல் மற்றும் மாநில பாஜக தலைவர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மேடைக்கு வந்திருந்தனர். 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே தேர்தல் போர் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த மாபெரும் பேரணி கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

ஜன சங்கத்தின் இணை நிறுவனர் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளிலும், மாநிலம் முழுவதும் பரவிய பாஜகவின் 'ஜன் ஆசீர்வாத் யாத்ரா'வின் முறையான உச்சக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் 'கார்யகர்த்தா மகாகும்பம்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com