கா்நாடகத்தில் முழு அடைப்பு: 44 விமானங்களின் சேவை ரத்து

கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பெங்களூரு விமாந நிலையத்தில் இருந்து 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


பெங்களூரு: காவிரி நதிநீா் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விளைவாக, காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பெங்களூரு விமாந நிலையத்தில் இருந்து 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

காவிரி நதிநீா் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விளைவாக, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, கா்நாடக-தமிழக எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

போராட்டத்தை முன்னிட்டு, பயணிகள் தங்களின் விமான பயணத்தை ரத்து செய்துள்ளதால், 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com