கடப்பாவில் ஷர்மிளா: அடுத்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

ஆந்திரம், ஒடிசா பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

ஆந்திரம் மற்றும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

ஆந்திரத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் 114 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ். பேரவைத் தேர்தலுடன், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்களின் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கிஷண்கஞ்ச் தொகுதியில் ஜாவேத் போட்டியிட, கதிஹார் தொகுதியில் தாரிக் அன்வர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடப்பா மக்களவைத் தொகுதியில் ஷர்மிளா போட்டியிடுகிறார். ஆந்திர மாநிலம் காகிநாடாவில், மத்திய அமைச்சர் எம்எம் பல்லம் ராஜூ போட்டியிடுகிறார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும், பிகாரில் 3 வேட்பாளர்களையும், மேற்கு வங்கத்தில் ஒரு வேட்பாளரையும் காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. இவர்களையும் சேர்த்து, காங்கிரஸ் இதுவரை மக்களவைத் தேர்தலில் அறிவித்திருக்கும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 228 ஆக உள்ளது. அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளில் யார் போட்டியிடுவார்கள் என்ற ரகசியம் இன்னும் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com