தோட்டத் தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரித்த மம்தா!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேநீர் தயாரித்துக் கொடுத்து பிரசாரம் செய்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரித்த மம்தா!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேநீர் தயாரித்துக் கொடுத்து பிரசாரம் செய்தார்.

மக்களவைத் தேர்தலையொட்டி முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். அவர்களுடன் தேயிலை பறித்த மம்தா, அவர்களுக்காக சாலையோரக் கடையில் தேநீர் தயாரித்து அவர்களுக்கு பரிமாறினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரித்த மம்தா!
ராகுல் - ஆனி ராஜா போட்டி: மக்கள் கேள்விகளை காங்கிரஸ் கவனத்தில் கொள்ள வேண்டும்!

மேலும், ஜல்பைகுரி மக்களுடன் இணைந்து மேளம் வாசித்து அவர்களுடன் நடனமாடினார். மேலும் அங்கிருந்த பள்ளிக் குழந்தைகளுடனும் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஜல்பைகுரியில் பல இளைஞர்களுடன் மம்தா பானர்ஜி கலந்துரையாடினார். அங்கிருந்த மக்களுக்கு தேநீர் தயாரித்துப் பரிமாறினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜுன் 4 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com