ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம் ஆத்மி தலைவர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

தனக்கு நெருக்கமானவர் மூலம் பாஜக தன்னை கட்சியில் சேர அணுகியது.

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 7:01 am

தில்லி சுகாதார அமைச்சரும், ஆம் ஆத்மி தலைவர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், தன்னை பாஜகவில் சேருமாறு மிரட்டியதாக ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டினார். பாஜகவில் சேரவில்லை எனில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக அதிஷிக்கு நோட்டீஸ் வழங்கியதுடன் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளது.

மத்திய அமைப்புகள் பாஜகவிடம் பணிந்துள்ளதைப் போல தேர்தல் ஆணையமும் பணிந்துவிட்டது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா? என அதிஷி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தலைவர்கள் என்ன சொன்னாலும் வாக்காளர்கள் அதை நம்புகிறார்கள். அந்தவகையில் அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் பிரசார உரையைப் பாதிக்கின்றன.

ஆத் ஆத்மி கட்சித் தலைவரின் அறிக்கைகளுக்கு உண்மையான அடித்தளம் இருக்க வேண்டும். எனவே, இதற்கு ஆம் ஆத்மி தலைவர் அதிஷி ஏப்ரல் 8 நண்பகலுக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.