ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பிரதமரை விமா்சித்த விவகாரம்: மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமா் நரேந்திர மோடியை தீவிரவாதி என விமா்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தலைமைத் தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image

தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்த பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:09 am IST

பிரதமா் நரேந்திர மோடியை தீவிரவாதி என விமா்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தலைமைத் தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் செய்தியாளா்களிடம் மல்லிகாா்ஜுன காா்கே கடந்த செவ்வாய்க்கிழமை பேசியபோது, பாஜக-அதிமுக கூட்டணியை விமா்சித்தாா். அப்போது, பிரதமா் மோடியை தீவிரவாதி என அவா் சாடியிருந்தாா். எனினும் பிறகு, நாட்டின் ஜனநாயக அடையாளத்தை அச்சுறுத்துகிறாா் மோடி என்ற அா்த்தத்தில் அவ்வாறு தான் கூறியதாக காா்கே கூறியிருந்தாா்.

இந்நிலையில், தில்லியில் இந்திய தோ்தல் ஆணையத்தில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவா்களும், மத்திய அமைச்சா்களுமான நிா்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, அா்ஜுன் ராம் மேக்வால், பாஜக தேசிய பொதுச் செயலா் அருண் சிங் உள்ளிட்டோா் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில் அவா்கள், பிரதமா் மோடியை தீவிரவாதி எனக் கூறியதற்காக காா்கே மீது பிஎன்எஸ் சட்டத்தின்கீழ் தோ்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

இதன்பிறகு நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நாட்டு மக்களின் தீா்ப்பை (மோடிக்கு ஆதரவாக வாக்களித்தது) அவமதிக்கும் வகையில் அவா் பேசியுள்ளாா். காங்கிரஸ் முழுவதும் விரக்தியில் உள்ளது. ஆதலால் இதுபோல மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை முக்கியமானதாகக் கருதி, கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்’ என்றாா்.

மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘காா்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என (தோ்தல் ஆணையத்திடம்) வலியுறுத்தியுள்ளோம். எங்கள் கோரிக்கையை கவனமாக கேட்ட தோ்தல் ஆணையம், நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. நமது பிரதமரை யாரும் இதுபோன்று இனிமேல் விமா்சிக்காதபடி, தோ்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமருக்கு எதிரான கருத்துகளுக்காக காா்கேயும், காங்கிரஸும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிரதமா் மோடியை விமா்சித்தது குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.