"புதிய விதிகள் எச்சரிக்கை: பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தையின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம்"

பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது கட்டாயமாகிறது.
"புதிய விதிகள் எச்சரிக்கை: பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தையின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம்"
Published on
Updated on
1 min read

புதுதில்லி: பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது கட்டாயமாகிறது. குழந்தையை தத்தெடுப்பதற்கு பெற்றோரின் மதத்தை தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி இது அமலுக்கு வருகிறது. இந்த விதிகளை மாநில அரசுகள் முன்பு முறையாக ஏற்றுக்கொண்டு அது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பை பதிவு செய்யும் பதிவேட்டில் பதிவு செய்துவந்த நிலையில், தற்போது பிறப்பு பதிவுக்கான படிவம் 1 இல் சில திருத்தங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. அதில் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டு அதற்கு நேரெதிரில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் குழந்தைக்கு வழங்கப்படும். குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, 2023 கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்பட்டது.

இதன்படி அக்டோபர் 2023 முதல், பிறப்பு, இறப்பு தரவுகள் தேசிய அளவில் பராமரிக்கப்படும். கல்வி நிறுவனங்களில் சேருதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாக்காளர் பட்டியலை தயாரித்தல்,ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் பெறுதல், கடவுச்சீட்டு வழங்குதல், திருமணங்களைப் பதிவு செய்தல் மற்றும் அரசுப் பணிகளுக்கான நியமனம் பெறுதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ்கள் முதன்மை ஆவணமாக இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது.

"புதிய விதிகள் எச்சரிக்கை: பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தையின் மதத்தை தெரிவிப்பது கட்டாயம்"
நீதியை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: ப. சிதம்பரம்

பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தேசிய தரவுத் தளத்தை பராமரிக்க பதிவாளர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிறப்பை பதிவு செய்யும் ஆவணத்தில் குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் பதிவு செய்வது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தாலும் இது பதிவுசெய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் தரவுத்தளத்தை உருவாக்க உதவும், இது இறுதியில் பொது சேவைகள் மற்றும் சமூக நலன்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகளின் திறமையான மற்றும் வெளிப்படையான புள்ளிவிவரத்துக்கானது மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு பதிவேட்டில் சட்ட தகவல், புள்ளிவிவர தகவல் என இறுவேறு தகவல்கள் அமைந்திருக்கும். அதில் பெற்றோர்களின் மதம் என்பது தகவலுக்காகவே பெறப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி பிறப்பு பதிவேட்டில் பெற்றோர்களின் ஆதார் எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி இருப்பின் அதையும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முகவரி விவரத்தில் மாநிலம், மாவட்டம், நகரம் அல்லது கிராமம், வார்டு எண், அஞ்சல் பின்கோடு ஆகியவற்றைச் சேர்ப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com