பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடக்கு, தெற்கு கோவா வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!

வடக்கு மற்றும் தெற்கு கோவா மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்தது.

News image
Congress
Updated On :6 ஏப்ரல் 2024, 8:10 am

DIN

வடக்கு மற்றும் தெற்கு கோவா மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்தது.

இந்தியா கூட்டணியின் நீண்டகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த பட்டியலை இன்று வெளியிட்டார்.

இருபதுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி கோவாவில் உள்ள இரு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

கலாப் (76) மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் மத்திய சட்டத்துறை இணை அமைச்சராக இருந்தார். பின்னர் எம்ஜிபியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இந்திய சிவில் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை உருவாக்கினார். நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் அவர் தாக்கல் செய்தார். இந்த நிலையில் வடக்கு கோவாவில் கலாப் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தெற்கு கோவாவின் காங்கிரஸ் வேட்பாளர் பெர்னாண்டஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரியாவர். இவர் 2022 கோவா சட்டமன்றத் தேர்தலில் டபோலிம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கோவாவில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக மே 7ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.