பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர்!

இதன் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு கேட்ட பாஜக வேட்பாளர்!

மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளரான ககென் முர்மு பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு சேகரித்த புகைப்படங்களுக்கு இணையத்தில் கண்டனம் குவிந்து வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் மால்டானா வடக்கு தொகுதி எம்.பி.யாக இருப்பவர் ககென் முர்மு. இவர் இதே தொகுதியில் தற்போது பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இதனையொட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

மக்களுடம் வாக்குறுதிகள் கொடுத்து வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக, அநாகரிகமாக முத்தம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாக அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதன் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. குத்துச்சண்டை வீராங்கனைகள் முதல் ஓட்டு போடும் சாதாரண மகளிர் வரை அனைவரிடமும் அநாகரிகமாக நடப்பதையே பாஜக தலைமையிலுள்ளவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

dinamani

மோடியின் குடும்பத்தினர் என தங்களை சொல்லிக்கொள்ளும் பாஜக எம்.பி. செய்யும் வேலையை இது காட்டுகிறது. இவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் என்ன நடக்கும் என சிந்தித்துப் பாருங்கள் என திரிணமூல் கட்சி பதிவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com