அனைத்து தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்ற ஒரே வாக்குறுதி இதுதான்!

அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்ற ஒரே வாக்குறுதி இதுதான்!
அனைத்து தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்ற ஒரே வாக்குறுதி இதுதான்!

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் இந்த நீட் தேர்வு மே மாதம் நடத்தப்பட்டாலும், ஆண்டு முழுவதுமே இது விவாதப்பொருள்தான்.

அதிலும் குறிப்பாக தேர்தல் என்றால் சொல்லவே வேண்டாம். அதனைக் கொண்டு வந்த கட்சி, அறிமுகப்படுத்திய கட்சி என்ற எந்த வேறுபாடும் இல்லாமல், தங்களது தேர்தல் அறிக்கையில் நீட்டுக்கு தனி இடம் நீட்டிவிடுவார்கள்.

அதுபோல, இந்த மக்களவைத் தேர்தலிலும் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு இடம்பெற்றுள்ளது.

அனைத்து தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்ற ஒரே வாக்குறுதி இதுதான்!
'மண்டே மோடிவேஷன்': ஆனந்த் மஹிந்திரா சொல்லும் ராஜேஷ் ரவானி யார்?

வெற்றிபெற்றால்தானே என்ற எண்ணத்திலும், வெற்றியே பெற்றுவிடுகிறோம். இதைச் செய்ய முடியாதா என்ற நம்பிக்கையிலும் பல கட்சிகளும் பல வாக்குறுதிகளை அள்ளிவீசுவது வழக்கம்தான். ஆனால், அதனை நம்பினால்?

நாங்கள் வந்தால் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டாலும், அது சாத்தியம்தானா என்பது இதுவரை தெரியவில்லை. இது இப்படியிருக்க, மாணவர்கள் அடுத்த ஆண்டு நீட் தேர்வு இருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகத்தினால் படிப்பதில் கவனச்சிதறல் ஏற்பட்டுவிடுமோ என்று கல்வியாளர்கள் கவலைதெரிவித்துள்ளனர்.

அனைத்து தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்ற ஒரே வாக்குறுதி இதுதான்!
19 கிலோ கஞ்சா மாயம்: எலிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜார்க்கண்ட் காவல்துறை

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம் என்று தெரிவித்துள்ளது. அதிமுகவோ, பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து புதிய முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்துறோம் என்று தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி, நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் தமிழக அரசின் தீர்மானத்துக்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்துவோம் என்கிறது.

காங்கிரஸ் கட்சியும் கூட, நீட் மற்றும் க்யூட் தேர்வுகளை மாநிலங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

நீட் எனும் அரசியல் விவகாரத்தால், மாணவர்கள் இடையே கடும் குழப்பம் ஏற்படலாம் என்று பள்ளி ஆசிரியர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் பல கல்வியாளர்கள், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும், மத்திய அல்லது மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக நீட் தேர்வு பற்றி அறிவிக்காத வரை, இந்த தேர்வுக்கு தயாராவதிலிருந்து தடைபட வேண்டாம் என்று வேண்டிக்கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கு முன்பும் கூட, மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின்போதும், ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம் என்று அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்திருந்தன. ஆனால், இதுவரை சாத்தியமாகவில்லை.

எனவே, நீட் தேர்வு என்பது மாணவர்களுக்குத்தான் தேர்வு. அரசியல்கட்சியினருக்கு அது ஒரு அரசியல்விவகாரம். சுடச் சுட எப்போதும் பேசுவதற்கு ஒரு பேசுபொருள். அவ்வளவே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com