டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

டெல் அவிவ் நகருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ஏா் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

புது தில்லி: இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலைத் தொடா்ந்து, அந்நாட்டின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ஏா் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கும் தில்லிக்கும் இடையே நேரடி விமானச் சேவையை வாரத்துக்கு நான்கு விமானங்களை ஏா் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது.

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் காரணமாக கடந்த 5 மாதங்களாக இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானச் சேவை கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.

இந்நிலையில், சிரியாவில் உள்ள தங்களின் துணைத் தூதரகத்தைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து
பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

ஈரானுக்கு எதிரான பதில் தாக்குதலில் இஸ்ரேல் விரைவில் ஈடுபடும் என்ற பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு இயக்கப்படும் விமானச் சேவையை மீண்டும் தற்காலிகமாக ஏா்-இந்தியா ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைத்துள்ளது.

இதையடுத்து ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ மற்றும் சில சர்வதேச விமான நிறுவனங்கள் ஈரானிய வான்வழியைத் தவிர்த்து, மேற்கு நாடுகளுக்கான தங்கள் விமானங்களுக்கு மாற்று விமானப் பாதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளன. இதனால் விமானங்களின் பயண கால அளவு அதிகரிப்பு, அதிக செயல்பாட்டுச் செலவுகள், எரிபொருள் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் பணி நேர வரம்புகள் அதிகரிப்பதால், அதிகமான பணியாளர்களை விமானங்களில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும் என்பதால் சர்வதேச விமான கட்டணங்கள் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இரு தரப்புக்கும் இடையே பகைமை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக இந்தியா தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com