பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியுமான அமீர் சா்ஃப்ராஸ் தம்பா, லாகூரில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை
Published on
Updated on
1 min read

புதுதில்லி: பாகிஸ்தானில் மரண தண்டனைக் கைதியான இந்தியர் சரப்ஜித் சிங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியுமான அமீர் சா்ஃப்ராஸ் தம்பா, லாகூரில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானின் லாகூர் இஸ்லாம்புரா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் அங்கிருந்த அமீர் சா்ஃப்ராஸ் தம்பாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த தம்பா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை
மோடி தேர்தல் அறிக்கையில் பணவீக்கம், வேலையின்மை வார்த்தையே இல்லை: ராகுல்

லாகூரில் 1979 இல் பிறந்த அமீர் சா்ஃப்ராஸ் தம்பா லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனரின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் 1990-இல் நடைபெற்ற பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவராக குற்றஞ்சாட்டப்பட்ட 49 வயதான சரப்ஜீத் சிங்குக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து உயா் பாதுகாப்பு மிக்க கோத் லக்பத் சிறையில் சரப்ஜீத் அடைக்கப்பட்டாா். அப்போது, சரப்ஜீத் சிங்கை அமீா் சா்ஃப்ராஸ் தம்பா உள்ளிட்ட சிறைக் கைதிகள் செங்கற்கள் மற்றும் இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்டதைத் தொடர்ந்து,ஒரு வார காலம் கோமா நிலையில் இருந்த சரப்ஜீத் சிங், கடந்த 2013, மே 2 ஆம் தேதி அதிகாலை மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com