தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் பி.காளியம்மாளை ஆதரித்து சீமான் பிரசாரம்
தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

தனியார் நிறுவனங்களிடம் அரசு தோற்றுவிட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் பி.காளியம்மாளை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், ஏசு பிறந்த 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் தொல்கப்பியம் உள்ளது. அது ஆதி நூல். இனத்தின் தொன்மையை அறிய காடுகளுக்கு சென்று அறிய வேண்டும்.

அறிவை வளர்க்கும் கல்வியை அரசால் கொடுக்க முடியவில்லை. தனியாரில்தான் தரமான கல்வி கிடைக்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். எனில், அரசு தோற்றுப்போனது என பொருள்.

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு
முதல்வருக்கு தோல்வி பயம்: இபிஎஸ்

தனியாரால் கொடுக்கப்படும் தரமான நீரை அரசால் கொடுக்க முடியவில்லை. தனியார் கொடுக்கும் மருத்துவத்தை அரசால் கொடுக்க முடியவில்லை.

தமிழக அரசால் முல்லைப் பெரியாறில் தண்ணீர் பெற்று தரமுடியவில்லை. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள இடதுசாரி கட்சிதான் கேரளத்தில் ஆட்சி நடத்துகிறது. தமிழ்நாட்டிகு திமுக என்ன செய்தது?

டாஸ்மாக் திறந்துவைப்பதில் மட்டுமே பாஸ் மார்க் வாங்கி வைத்துள்ளது திமுக அரசு.

தமிழ்நாட்டிற்கு தண்ணீரைக் கொடுக்க மறுப்பது காங்கிரஸ். கச்சத்தீவை விட்டுக்கொடுத்து தமிழர்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் என சீமான் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com