முதல்வருக்கு தோல்வி பயம்: இபிஎஸ்

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
முதல்வருக்கு தோல்வி பயம்: இபிஎஸ்
Published on
Updated on
1 min read

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் 3 ஆண்டுகள் குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. திமுக ஆட்சியில் பல துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்கு இடம் கொடுத்தது திமுகதான்.

தற்போது மு.க. ஸ்டாலின் மட்டுமின்றி உதயநிதி உள்ளிட்ட பலர் தமிழ்நாட்டை ஆள்கின்றனர். ஒற்றை செங்கலை வைத்து நாடகமாடுகிறார் உதயநிதி. எய்ம்ஸ் விவகாரத்தில் 38 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்களா?

சிலர் கட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் கூட ஆகவில்லை, ஆனால் அவர்கள் அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள்

அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்ததுதான் வரலாறு. அதிமுக பற்றி யார் பேசினாலும் இடம்தெரியாமல் மறைவார்கள்.

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பச்சை பொய் சொல்லி வருகிறார். போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதற்கு காரணம் திமுக என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com