100 மோடிகள் வந்தாலும்... திருமாவுக்கு ஆதரவாக கார்கே பிரசாரம்

100 மோடிகள் வந்தாலும் சரியாக வாக்களித்தால் ஜனநாயகத்தை அழிக்க முடியாது என்றார் மல்லிகார்ஜுன கார்கே.
பிரசார பொதுக்கூட்ட மேடையில் மல்லிகார்ஜுன கார்கே
பிரசார பொதுக்கூட்ட மேடையில் மல்லிகார்ஜுன கார்கே
Published on
Updated on
1 min read

100 மோடிகள் வந்தாலும் சரியாக வாக்களித்தால் ஜனநாயகத்தை அழிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் மற்றும் கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவாக நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், நாட்டில் சரவாதிகாரத்தை அகற்றுவோம். அஞ்சல் துறை, கேந்திரிய வித்யாலயா உள்பட பல அரசுத் துறைகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. மனுதர்மம் மூலம் சாதாரண மக்கள் வாழ்க்கையில் ஆர்.எஸ்.எஸ். விளையாடுகிறது.

பாஜக தேர்தல் அறிக்கையில் ஏழைகள் பலன்பெறும் வகையில் எந்தத் திட்டங்களும் இல்லை.

ஓட்டுக்காக இன்று பலர் உங்கள் இல்லங்களைத்தேடி வருகின்றனர். அதற்கு காரணம் அரசியலமைப்பு சட்டம். அதனை இயற்றி அளித்தவர் அம்பேத்கர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நமது இல்லங்களைத் தேடி யார் வந்தார்கள்?. தற்போது இல்லம் தேடி வருகின்றனர். இந்த அதிகாரத்தை நமக்கு வழங்குவது அரசியலமைப்பு சட்டம். அதனை காக்க வேண்டியது நமது கடமை.

பானை சின்னத்துக்கும், கை சின்னத்துக்கும் வாக்களிக்க வேண்டும். அதன்மூலம் அரசியலமைப்பு காக்கப்படும், ஜனநாயகம் காக்கப்படும்.

100 மோடிகள் வந்தாலும் நீங்கள் சரியாக வாக்களித்தால் ஜனநாயகத்தை அழிக்க முடியாது

சர்வதிகாரத்தை அகற்றுவோம் எனப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com