ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்
இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?
இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?

புது தில்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை, ஒரு முறை அழுத்தினால், பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் விழுவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு முறை தாமரை சின்னத்தை அழுத்தினால் இரண்டு வாக்குகள் பதிவானதாக எதிர்க்கட்சியினர் புகார் அளித்துள்ளனர.

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?
ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது.

அப்போது, பாஜகவுக்கு ஒரு முறை வாக்களித்து பரிசோதித்த போதும், இரண்டு வாக்குகள் பதிவானதாகக் காண்பிக்கப்பட்டதாக அங்கிருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். இந்தப் புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தது.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்ட பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தின் மீது எவ்வித பழியும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கேரள மாநிலம் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் பதிவான செய்தியில் உண்மையில்லை. கூடுதல் வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று உச்ச நீதிமனறத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் இயந்திரத்தில் விழும் வாக்குச்சீட்டுகளை எண்ணி சரிபார்க்கக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் மேலும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com