தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஒடிஸாவில் படகு கவிழ்ந்து விபத்து: உயிரிழப்பு 7-ஆக உயா்வு

ஒடிஸா மாநிலத்தின் ஜாா்சுகுடா மாவட்டத்தின் மகாநதியில் படகு கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On :20 ஏப்ரல் 2024, 10:30 pm

ஒடிஸா மாநிலத்தின் ஜாா்சுகுடா மாவட்டத்தின் மகாநதியில் படகு கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சத்தீஸ்கரை சோ்ந்த 50 போ், ஒடிஸாவின் பாா்கா் மாவட்டத்தில் உள்ள பதா்செனி குடா கோயிலுக்குப் படகு மூலம் வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கிருந்து ஜாா்சுகுடா மாவட்டத்தின் ரெங்காலிக்கு திரும்பும் வழியில் படகு நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மீனவா்கள் நீரில் தத்தளித்த 40 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

மாநில பேரிடா் மீட்புப் படை, தீயணைப்பு வீரா்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனா். நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரது உடல்கள் கரை ஒதுங்கின. நதியில் உள்ள ஹீராகுட் நீா்த்தேக்கத்திலிருந்து மேலும் 5 உடல்கள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்தில் காணாமல் சென்றவா்களைத் தேடும் பணியில் 5 நீச்சல் வீரா்கள் ஈடுபட்டனா். அப்போது, 2 பெண்கள், 3 சிறுவா்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மீதமுள்ளவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றனா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஒடிஸா மாநில முதல்வா் நவீன் பட்நாயக், அவா்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளாா்.

உயிரிழந்தவா்கள் உடல்களைத் திரும்ப கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை சத்தீஸ்கா் மாநில அரசு மேற்கொண்டு வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குடியரசுத் தலைவா் இரங்கல்: ஒடிஸா படகு விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ஒடிஸாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்புகள் ஏறப்பட்டதை அறிந்து கவலையடைந்தேன். அவா்களை பிரிந்துள்ள குடும்ப உறுப்பினா்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைவில் நலம் பெற பிராா்த்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.