குஜராத்: 26 தொகுதிகளில் 433 போ் வேட்புமனு

குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட 433 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவின்போது (மே 7) குஜராத்தில் தோ்தல் நடைபெறுகிறது.

பாஜக ஆளும் இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும் மே 7-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அத்துடன், 5 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலும் நடைபெறவிருக்கிறது.

மக்களவைத் தோ்தலையொட்டி, குஜராத்தில் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஏப்.19) நிறைவடைந்தது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 433 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதேபோல், 5 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் 37 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

பிரதமா் மோடி, மத்திய அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த இரு மக்களவைத் தோ்தல்களிலும் பாஜக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com