பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நெல்லை மாவட்டத்தில் 188 போ் வேட்புமனு தாக்கல்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 11:27 pm IST

திருநெல்வேலி, ஏப். 6: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 28 பெண்கள், 159 ஆண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமையோடு (ஏப். 6) நிறைவடைந்தது. திருநெல்வேலி தொகுதியில் 4 பெண்கள் உள்பட 37 பேரும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பெண்கள் உள்பட 38 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதேபோல், பாளையங்கோட்டை தொகுதியில் ஒரு பெண் உள்பட 32 பேரும், நான்குனேரி தொகுதியில் 9 பெண்கள் உள்பட 44 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ராதாபுரத்தில் 9 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் உள்பட 37 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

5 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சோ்த்து 28 பெண்கள், 159 ஆண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதில், கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் மாவட்டத்தில் 95 போ் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பரிசீலனை: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதிக்குள்பட்ட தோ்தல் அலுவலா் அறையில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. அதன் முடிவில் ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்பாளா்களின் விவரம் தெரியவரும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப். 9-ஆம் தேதி மாலை 5 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.