ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.

News image
Updated On :20 ஏப்ரல் 2024, 6:13 am

DIN

மக்களவைத் தேர்தலையொட்டி மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்துகிறார்.

கர்நாடகத்தில் ஏப் 26 மற்றும் மே 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்

அதன்படி, மகாராஷ்டிரத்தின் நான்டெட் மக்களவைத் தொகுதியிலும், பர்பானி மக்களவைத் தொகுதியிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அத்துடன் கர்நாடகத்தின் சிக்கபல்லாபூர் மக்களவைத் தொகுதியில் பிற்பகல் 3.45-க்கும் பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் மாலை 5.30-க்கு அவர் உரையாற்றுகிறார்.

அதேபோன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜஸ்தானின் பில்வாரா மக்களவைத் தொகுதியில் காலை 11 மணிக்கும், கோ்டா மக்களவைத் தொகுதியில் பிற்பகல் 12.30 மணிக்கும் என இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார். பின்னர், உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.